காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் மாதாந்தக் கூட்டம் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் உட்பட திணைக்கள தலைவர்கள் அதிகாரிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது, காத்தான்குடி பிரதேசத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் பல்;வேறு வேலைகள் குறித்த முன்னேற்றங்கள் குறித்தும் ஆராயப்பட்டன. (சி)