மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபையின் மாதாந்த அமர்வு, இன்று காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்றது.

காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது காத்தான்குடி நகர சபையில் கடமையாற்றும் பதிலீட்டு உத்தியோகத்தர்களை தற்காலிக ஊழியர்களாக தரமுயர்த்தி அவர்களின் நாளந்த சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதென காத்தான்குடி நகர சபை இன்றைய அமர்வின் போது தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில் காத்தான்குடி சபையின் நிதி நிலைமைக்கேற்ப முதல் கட்டமாக காத்தான்குடி நகர சபையில் பதிலீட்டு சுகாதார தொழிலாளிகளை தற்காலிக ஊழியர்களாக மாற்றி அவர்களின் நாளார்ந்த சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்;பதெனவும் பின்னர் அடுத்த கட்டத்தில் ஏனைய ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் காத்தான்குடி நகர சபையினால் மேற் கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் நகர சபையினால் சுப்பர் மார்க்கட் ஒன்று நிர்மானிப்பது தொடர்பாக ஆராயப்பட்டன.(சி)

Previous articleமட்டு, காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஆராய்வு.
Next articleவிஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் கோட்டாபய ஆஜர்