மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில், சமுர்த்தி திட்டத்தில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட புதிய குடும்பங்களுக்கான சமுர்த்தி உரித்துப்பத்திரம் வழங்கும் நிகழ்வு, இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அலிசாஹீர் மௌலானா காத்தான்குடி நகர சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் புதிய காத்தான்குடி வலய சமுர்த்தி முகாமையாளர் ஏ.எல்.இசட் பஹ்மி உட்பட அதிகாரிகள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 350 புதிய குடும்பங்களுக்கான சமுர்த்தி உரித்துப் பத்திரங்கள் பயணாளிகளிடம் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த வைபவத்தில் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹீர் மௌலானா, எந்தவொரு அரசியல் வாதியையும் பாதுகாப்பதற்காக நாம் அமைச்சுப்பதவிகளை இராஜினாமாச் செய்யவில்லை. முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை நோக்கமாக கொண்டே நாம் எமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்தோம் என தெரிவித்தார். (சி






