மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் உள்ள வீடொன்றில் வெள்ளிக்கிழமை மாலை திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதிய காத்தான்குடி கிராமோதய வீதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் வெளியில் சென்றிருந்தவேளை, வீட்டின் கதவு அலுமாரி என்பவைகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த ஐம்பதாயிரம் ரூபா பணம்மற்றும் மோதிரம், கைப்பட்டி உட்பட மூன்று பவுண் தங்க நகைகள் என்பன திருடப்பட்டுள்ளதாக வீட்டுரிமையாளர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சிந்திக விக்ரமசிங்க தலைமையில் ஐ.பி.விமலசிறி உட்பட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் நேற்று சம்பவம் இடம்பெற்ற குறித்த வீட்டுக்கு சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் ஈடுபட்டனர்.










