டெங்கு ஒழிப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விசேட வேலைத்திட்டமொன்று மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இன்று நடைபெற்றது.

பிரதேச சுகாதார வைத்தியதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது பயிற்றப்பட்ட தொண்டர் ஊழியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதையடுத்து பிரதேசத்தில் சுகாதார அதிகாரிகளினால் அடையாளப்படுத்தப்பட்ட கிணறுகளுக்கு பாதுகாப்பு வலைகள் விரிக்கப்பட்டு மூடப்பட்டன.

மேலும் முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் உள்ளிட்ட சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அம்கோர் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

ஏறாவூர்ப் பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் நோய் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளபோதிலும் அடுத்த சில மாதங்களில் மாரி மழை ஆரம்பிக்கும்போது டெங்கு அபாயம் ஏற்படுவதைக் கருத்திற்;கொண்டு அம்கோர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.(சி)

Previous articleபாராளுமன்ற செலவு குறித்து சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும் : ரத்நாயக்க
Next articleமட்டு, வவுணதீவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் காட்டுயானைகளின் அட்டகாசம்