கம்பெரலிய திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் தாமரைக்கேணி யூஎல் தாவூத் மாதிரிக்கிராமத்திற்கான வீதியை கொங்கிறீட் பாதையாக புனரமைக்கும்பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் சிபாரிசின் அடிப்படையில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது.
செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.அன்வர் தலைமையில் நடைபெற்ற இவ்வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் நாகமணி கதிரவேல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிராந்திய அமைப்பாளர் எம்.எல்.ஏ.லத்தீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த வீதி மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாது மணற்பாதையாக காணப்படுவதனால் பொதுமக்கள் எதிர் நோக்கிய அசௌகரியதினைக் கருத்திற்கொண்டு இப் புனரமைப்புப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (சி)