தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  – சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு  ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின்  பணிப்புரைக்கு அமைவாக  நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு  சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு அமைவாக மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை  மாணவர்களினால்  டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு   நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு  வருகின்றனர் .

இதன் கீழ் இன்று மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்  வித்தியாலயத்தில்   அதிபர் வி .முருகதாஸ் தலைமையில் வித்தியாலய டெங்கு ஒழிப்பு குழு  ஆசிரியர் திருமதி   எம் .சங்கர் ஒழுங்கமைப்பில்  வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து  டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது

இதன் போது பாடசாலை டெங்கு ஒழிப்பு மாணவர்களுக்கு சின்னங்களும் அணிவிக்கப்பட்டது

இதனை தொடர்ந்து சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் வகையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது

இந்நிகழ்வுகளில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களை  ,சுகாதார பரிசோதகர் ஆகியோர் கலந்துகொண்டனர் .

 

Previous articleசவுதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்
Next articleபாகிஸ்தானிடம் பிடிபட்ட இலங்கை மீனவர்கள் விடுவிப்பு