மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்குடாவெளி கிராம வயல் பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று ஞாயிறு மாலை 05.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு செங்கலடி சந்தைவீதியைச் சேர்ந்த 39 வயதுடைய சுந்தரமூர்த்தி ஆனந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் அப்பிரதேச வயல் வெளியில் உள்ள தென்னை மரமொன்றின் கீழ் நின்றவேளை மின்னல் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் செங்கலடி பன்குடாவெளியைச் சேர்ந்த 34 வயதுடைய ச.சங்கர் என்பவர் காயமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.








