தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினையொட்டி, போதையிலிருந்து விடுபட்ட நாட்டினை உருவாக்கும் ஜனாதிபதியின் செயற்திட்டத்துக்கமைய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வொன்று, இன்று மட்டக்களப்பு மாநகர சபையில் நடைபெற்றது.

ஊழியர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையினை தடுக்கும் வகையில், இந்த போதையொழிப்பு வாரத்தினையொட்டிய நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையும் தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையும் இணைந்து, மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வாக நடாத்தியது.

மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே.சித்திரவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன்,தேசிய ஆபத்தான அவுடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வளவாளர் ஜி.பி.எம்.றஸாட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

போதைப்பொருளில் இருந்து விடுபடலும் சிறந்த வாழ்க்கை முறையினை கட்டியெழுப்பலும் என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில், மாநகர சபை சுகாதார ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.(சி)

Previous articleஅம்பாறை ஆலையடிவேம்பில் இலவச அமபுலன்ஸ் சேவைக்கான விளக்கமளிப்பு
Next articleமட்டு இந்துக் கல்லூரி மைதானம், புனரமைப்புச் செய்யப்பட்டு திறந்து வைப்பு