போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டங்கள் தற்போது நாடளாவிய ரீதியில் கிராம மட்டத்தில் விழிப்புணர்வு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளின் இயங்குகின்ற சமுர்த்தி வங்கிகள் ஊடாக போதைப்பொருள் ஒழிப்பு செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன
இதற்கு அமைய மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பகுதியில் இயங்கும் நான்கு சமுர்த்தி வங்கிகள் ஊடாக கிராம மக்களுக்கு போதைப்பொருள் தொடர்பாக தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இதன் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் டி. சத்தியசீலன் தலைமையில் இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கி அலுவலக மணடபத்தில் நடைபெற்றது.
கருத்தரங்கில் வளவாளராக உளநல மருத்துவ சேவை ஆலோசகரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர்
ஜூடி ஜெயகுமார், கலந்துகொண்டார்.
கருத்தரங்கில் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் கே பரமலிங்கம், இருதயபுரம் கிழக்கு வங்கி முகாமையாளர் கே.லதா, இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி உத்தியோகத்தர், வங்கி உத்தியோகத்தர்கள், கிராம சீவி உத்தியோகத்தர்கள், மற்றும் கிராம மட்டத்தில் இயங்குகின்ற சமுர்த்தி சங்கங்களின் உறுப்பினர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்