இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமாயின் தமிழ், சிங்கள மக்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்றைய தினம் நடைபெற்ற திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவிற்கு விற்கும் ஒப்பந்தத்தை இல்லாதொழிப்போம் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே அத்துரலிய ரத்ன தேரர் இவ்வாறு கூறினார்.
இதேவேளை, முஸ்லிம் மக்களும் இலங்கையர் என்ற நிலையில் இருந்து செயற்பட வேண்டும் என்பதே தமது பிரதான எதிர்பார்ப்பு என்று அத்துரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மத்ரஸா பாடசாலைகளில் முழுமையாக பிற மதங்களின் மீதான வெறுப்புணர்வும் அடிப்படைவாதமுமே போதிக்கப்படுவதாக அத்துரலிய ரத்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் இன்று இஸ்லாமிய அடிப்படைவாதம் ஒரு புறமும், வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்புக்கள் ஒப்பந்த ரீதியில் இடம்பெறுவது மறுபுறமும் நடைபெற்றுவருவதாக சுட்டிக்காட்டினார்.
இவ்விரு செயற்பாடுகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தான்தோன்றித்தனமாக பொருளாதார கொள்கைகளும், பொருத்தமற்ற அரசியல் கொள்கைகளும் மூல காரணியாக அமைந்துள்ளதாகதாக அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். (நி)