மக்களை தூக்கிலிட்டு தன்னாலும் ஜனாதிபதியாக முடியும் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்களை தூக்கிலிட்டு ஜனாதிபதியாக முடியுமென்றால் எமக்கும் அவ்வாறான வாய்ப்புக்கள் அதிகம் கிடைத்திருக்குமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச,
“அரசாங்கம் தேச துரோக செயற்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. ஆகையால் மக்கள் அவர்களை ஒருபோதும் நம்பமாட்டார்கள்.
இதேவேளை அலுகோசு பதவிக்கு ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நீதிமன்றமே அதனை செய்ய முடியும்.
மேலும் இவ்விடயத்திற்கு தனிப்பட்ட ரீதியில் மறுப்பு தெரிவிப்பதுடன் நான் கையொப்பமும் இடவில்லை.
ஆனால் ஜனாதிபதி, போதைப்பொருள் பாவனையை முன்னிறுத்தி மரணத் தண்டனையை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்கின்றார்.
ஆனால், இத்தகைய தருணம் அதற்கு உகந்ததல்ல. இருப்பினும் இவ்விடயத்தில் இறுதி தீர்மானத்தை எடுக்கக்கூடிய பொறுப்பு ஜனாதிபதிக்கே உள்ளது.
அத்துடன் மக்களை தூக்கிலிட்டு ஜனாதிபதியாக முடியுமென்றால் எமக்கும் அவ்வாறான வாய்ப்புக்கள் அதிகம் கிடைக்கும்.ஆனால் ஜனாதிபதி, அத்தகையதொரு எண்ணத்தில் செயற்படுவாரென்று நான் நினைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.(மா)