மகிந்த, கோட்டபாய செய்த உடன்படிக்கையினை தொடர்ந்தும் நீடித்துச் செல்வதையே தற்போதய அரசு செய்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
மகிந்தராஜபக்ச ஜனாதிபதியாவும், கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகவும் இருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதையே தற்போதய அரசு செய்கின்றது.
ஆனால் அதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு வெளியிடுகின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதய அரசியல் நிலமை தொடர்பில் நாம் எடுத்துப்பார்த்தால் அண்மையில் சில நாட்களாக எதிர்கட்சியினர் அரசாங்கம் செய்யவுள்ள உடன்படிக்கைகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள். குறிப்பாக சோபா ஒப்பந்தம் மற்றும் எக்டா உடன்படிக்கை தொடர்பில் எதிர்ப்பை வெளியிடுகின்றார்கள்.
நாட்டின் இறையாண்மையை பாதிக்கின்ற எந்தவிதமான உடன்படிக்கையிலும் கைச்சாத்திடப் போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெளிவாக கூறியிருக்கின்றார்.
இந்த உடன்படிக்கை மகிந்தராஜபக்ச ஜனாதிபதியாவும் கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகவும் இருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே அரசின் நோக்கம் அதற்கு மேல் புதிததாக எதுவும் செய்யப் போவதில்லை இந்த நாட்டில் யாரும் முகாம் அமைப்பதற்கோ, நாட்டை யாருக்குக் கீழும் கொண்டுவருவதற்கோ எந்தவித நடவடிக்கையும் செய்யப் போவதில்லை. என்பதை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருக்கின்றார். (நி)









