ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில்லஸ் டி கெர்ச்சோவ், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இவர்களுக்கிடையிலான சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கையில் பாதுகாப்பை வலுப்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிர்க்கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என்று எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ஷ, தன்னை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் உறுதியளித்திருந்தார். (நி)








