ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வேலூர் சிறையில் உள்ள நளினியை வரும் 5ந் தேதி மதியம் 2.15க்கு நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டனர். காணொலி வாயிலாக ஆஜராக நளினி விரும்பவில்லை என அரசு, சிறைத்துறை கூறியதை தொடர்ந்து இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.(சே)
Previous articleபுகையிரதத்தில் மோதுண்டு ஐவர் பலி: இருவர் படுகாயம்
Next articleகுருநாகல் வைத்தியரால் அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல்!