ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் தெரசா மே, பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார்.
இங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை அலங்கரிப்பவரே, நாட்டின் பிரதமர் நாற்காலியிலும் அமர வைக்கப்படுவார். அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக போரிஸ் ஜோன்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜோன்சனுக்கும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெராமி ஹண்டுக்கும் இடையே இன்று போட்டி இடம்பெற்றது.(சே)








