தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு வவுனியாவிலிருந்து வாகனப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டச்செயலகத்திலிருந்து இன்று ஆரம்பமான இந்த வாகனப் பேரணி ஏ9 வீதியின் ஊடாக கிளிநொச்சியை சென்றடையவுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய போதை ஒழிப்பு வாரம் நாடெங்கும் பல்வேறு வேலைத்திட்டங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இந்த வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்டச்செயலாளர் ஐ.எம்.கனீபா தலைமையில் இடம்பெற்ற இந்த வாகன பேரணியில் வவுனியா மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்கள், அரச நிறுவனங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். (நி)