போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாகனப் பேரணி யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி மாவட்டதை நோக்கிப் பயணித்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாகனப் பேரணி யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி மாவட்டதை நோக்கிப் பயணித்துள்ளது.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து இன்று காலை 8.45 மணியளவில் இந்த பேரணி ஆரம்பமானது.
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாகனப் பேரணியை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆரம்பித்து வைத்தார். (நி)