ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, 10 அரசியல் கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விஜயராமயில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து இன்று காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்ட அரசியல் கட்சிகளும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளுமே இவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.

மௌபிம ஜனதா கட்சி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, முஸ்லிம் உலமா கட்சி, லிபரல் கட்சி, நவ சிஹல உறுமய, ஜனநாயக தேசிய இயக்கம், எக்சத் லங்கா மகா சபா கட்சி மற்றும் பூமி புத்திர கட்சி ஆகிய 10 கட்சிகளுடனே இவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. (நி)

Previous articleஊரெழு ஆலயத்தில் இருந்த குளவிக்கூடு அகற்றப்பட்டது! (காணொளி இணைப்பு)
Next articleஐ.எஸ் ஆதரவாளர்களுக்கு அவுஸ்ரேலியாவில் தடை!