முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் பேராற்றில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்தில் எந்தவிதமான அனுமதியும் பெற்றுக்கொள்ளாது மணல் அகழ்வு தொடர்வதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மணலை ஆற்றங்கரையிலே குவித்து வைத்து விட்டு இரவு வேளைகளில் சட்டவிரோதமாக வாகனங்களில் ஏற்றி வெளி இடங்களுக்கு கொண்டு செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


எனினும்இ சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட எந்த ஒரு திணைக்கள அதிகாரிகளோ அல்லது பொலிஸாரோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறித்த பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.


எனவே பேராறு பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையை பொலிஸார் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தங்களுடைய இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு ஒத்தாசை வழங்குமாறு மக்கள் கோரி விடுத்துள்ளனர்.


குறிப்பாக இந்த ஆற்று பகுதிகளில் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (நி)

Previous articleஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சங்காபிஷேகம் (படங்கள் இணைப்பு)
Next articleசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் தென்பகுதி மக்கள் சத்தியாகிரகம்!