அரசாங்கம் மக்களின் கருத்திற்கு மதிப்பளித்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தவிசாளர் போராசியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று, பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கருத்துக்களை குறிப்பிட்டுள்ளது.
பொதுத் தேர்தலை நடத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பினை கோருவதற்கு எவ்வித அவசியமும் கிடையாது.
அரசாங்கம் குறிப்பிடுவதை போன்று, பொதுசன அபிப்பிராயத்தை கோரினால், பெரும்பாலான மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகவே தமது தீர்மானங்களை முன்வைப்பார்கள்.
இத் தீர்மானங்களை கொண்டு எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது.
19வது அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கூடிய தினத்தில் இருந்து நான்கரை வருடம் பதவி வகிக்க வேண்டும்.
இடைக்காலத்தில் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற வேண்டும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தற்போதைய நிலையில் கிடைக்கப் பெறும் என்பது சாத்தியமற்றது.
இந்த ஒரு வழியின் ஊடாகவே பாராளுமன்றத்தை கலைக்க முடியும்.
என குறிப்பிட்டுள்ளார். (சி)








