தற்போது ஏற்பட்டுள்ள அழிவில் இருந்து நாட்டை மீட்க மஹிந்த ராஜபக்ஷவின் இலக்கை கொண்ட தலைவர் ஒருவரினால் மாத்திரமே முடியும் என பா​ராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்டான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் விரும்பும் ஒருவரே பொதுஜன பெரமுன வேட்பாளராக இருக்க வேண்டும் என்பது மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்த போது அங்கிருந்த பெண்கள் கோட்டாபய ராஜபக்ஷ என கேஷமிட்டனர்.

இதனை கேட்ட பிரசன்ன ரணதுங்க, பெண்களுக்கு ராஜபக்ஷர்கள் மீது அதீத அன்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.(சே)

Previous articleநிரந்தர கணக்காளர் நியமனம்-கோடீஸ்வரனுக்கும் உண்ணாவிரதிகள் நன்றி
Next articleடோனி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு