கிளிநொச்சி பூநரி பகுதியில் மேற்கொள்ளப்படும் முறையற்ற மண்ணகழ்வைத் தடுத்து நிறுத்தக்கோரி, பூநகரிபிரதேச மக்கள் ஒன்று திரண்டு பூநகரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கௌதாரிமுனை பிரதேசத்தில் தொடர்ந்து சட்டவிரோதமணல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் மண்ணகழ்வை நிறுத்துமாறு கோரி பிரதேச மக்களால் தொடர்ந்தும்வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் மண்ணகழ்வு தொடர்பாகவும்,அவற்றைத் தடுத்து நிறுத்துமாறும் கோரி, பிரதேச மக்கள் பொலிசாரிடம் அறிவித்திருந்தனர்.
எனினும் மண்ணகழ்வை நிறுத்துவதாக பொலிஸார் தெரிவித்தும், தொடர்ந்தும் அப்பகுதியில் மண்ணகழ்வு மேற்கொள்ளப்பட்டதையடுத்து, இன்று பிற்பகல் பூநகரி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பிரதேச மக்கள் ஒன்றுகூடினர்.
இதன்போது குறித்த மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் அங்கு சென்றிருந்தார்.
தொடர்ந்து மணல் அகழ்வு தொடர்பில், பொலிசாருக்கும், பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும்இடையில் கலந்துராயாடலொன்றும் இடம்பெற்றது.
இதனயடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நாளை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து,மண்ணகழ்வை நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிசார் தெரிவித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். (சி)








