டட்லி செல்வா ஒப்பந்தத்தினை கிழித்தெறிந்து விடுதலைப் புலிகள் அமைப்பினை சிங்களத் தலைவர்கள் உருவாக்கினர் என பாராளுமன்ற உறுப்ப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் மூன்று அமைப்புக்களை தடைசெய்வது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பினையும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினையும் ஒப்பிட்டு பேசுதனை அமைச்சர்களும் அரசியல் தலைவர்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நிலைப்பாட்டையும் புலிகள் அமைப்பின் நிலைப்பாட்டையும் ஒன்றாக ஒப்பிட்டு பார்க்க முடியாது.

டட்லி சேனாநாயக்க பண்டாரநாயக்க ஆகியோருடன் செல்வநாயகம் செய்து கொண்ட உடன்படிக்கைகள் சிங்களத் தலைவர்களினால் கிழித் தெறியப்பட்டன. அதன் பின்னராக வட்டுக்கோட்டை தீர்மானத்தினை நிறைவேற்றி தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக புலிகள் அமைப்பு உருவாகியது. என்பதற்கு அப்பால் சிங்கள அரசியல் தலைவர்களினால் உருவாக்கப்பட்டது. எனவே புலிகள் அமைப்பின் போராட்டத்திற்கு அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன. எனவே சபையில் பேசுகின்றவர்கள் யாராக இருந்தாலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் புலிகள் அமைப்பின் போராட்டத்தினை தியாகத்தினை ஒப்பிட்டு பேசவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

Previous articleஉயிர்த்த ஞாயிறு தொடர்பில் ISIS தலைவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை!
Next articleத.தே.கூட்டமைப்பை விமர்சித்து பலர் அரசியல் செய்கின்றனர்! (காணொளி இணைப்பு)