2020ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 9 ஆயிரம் பிள்ளைகளுக்கு பிரதமரின் தலைமையில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையினால் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
2020ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை உறுப்பினர்களின் பிள்ளைகள் 9 ஆயிரம் பேருக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் முதலாம் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
முதலாவது கட்டத்தின் கீழ் 6 ஆயிரம் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காக மக்கள் வங்கியில் சிசு உதான கணக்கினை திறப்பதற்கான காசோலை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையின் தலைவர் ஸ்ரீயான் டி சில்வா விஜயரத்னவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கிவைக்கப்பட்டது.பிரதமர் குறித்த காசோலையை அச்சந்தர்ப்பத்திலேயே மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷவிடம் கையளித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெறும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை உறுப்பினர்களின் 9 ஆயிரம் பிள்ளைகளுக்கு, ஒருவருக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம் புலமைப்பரிசில் வழங்கப்படும்.
தேசத்தின் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்கும், தொழிலாளர் பெருமக்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் ஒரு உன்னத பணியாக இப்புலமைப்பரிசில் வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைய இந்த நிகழ்வில் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் தலைவர் ஸ்ரீயான் டி சில்வா விஜயரத்ன, மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை பொது முகாமையாளர் டி.பீ.ஜீ.பெர்னாண்டோ, மக்கள் வங்கியின் பொது முகாமையாளர் ரஞ்சித் கொடிதுவக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எம்.ஜீ.ஏ.சமன் குமார உள்ளிட்ட ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை மற்றும் மக்கள் வங்கி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Home பிந்திய செய்திகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 09 ஆயிரம் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 09 ஆயிரம் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
