புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள 16 ஆயிரம் பட்டதாரிகளில் வெளிவாரிப் பட்டதாரிகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெளிவாரிப் பட்டதாரிகள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

நாடு முழுவதும் 16 ஆயிரம் பட்டதாரிகளை உள்வாங்கும் நோக்கில் எதிர்வரும் 29ம், 30ம் திகதிகளில் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியல்கள் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் எந்தவொரு வெளிவாரிப் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த பட்டதாரிகளும் உள்வாங்கப்படவில்லை என்பது பட்டியல்கள் மூலம் கண்டறியப்படுவதாக வெளிவாரிப் பட்டதாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக புறக்கணிக்கப்பட்ட வெளிவாரிப் பட்டதாரிகள் இன்று காலை யாழ் மாவட்டச்செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடி கலந்துரையாடியதுடன், யாழ் மனித உரிமை ஆணக்க்குழுவில் முறைப்பாடொன்றையும் பதிவுசெய்துள்ளனர்.
தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் அண்மையில் மாகாண சபைகளில் நியமனம் வழங்கப்பட்ட சிலரின் பெயர்களும் உள்ளடங்குவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. (சி)







