பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 25 பேர் காயமடைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின் மிண்டானா தீவுப்பகுதியில் நேற்றைய 5.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை.

நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்திருந்தனர்.

நிலநடுக்கத்தில் வீடுகள், அரச கட்டடங்கள் சேதமடைந்ததால் காயமடைந்த 25 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (நி)

Previous articleஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரரின் வேட்டைத்திருவிழா (படங்கள் இணைப்பு)
Next articleதிருகோணமலையில் சமூர்த்தி முத்திரை வழங்கப்பட்டது!