பிரேசில் நாட்டின் பாரா மாநிலத்தில் உள்ள சிறை ஒன்றில் நடைபெற்ற பயங்கர கலவரத்தில் 57 பேர் உயிரிழந்தனர்.

பிரேசில் நாட்டின் பாரா மாநிலத்தின் அல்டமிரா நகரில் உள்ள சிறை ஒன்றில் நேற்று பயங்கர கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட இந்த பயங்கர கலவரத்தில் சுமார் 57 பேர் உயிரிழந்துள்ளனர் என சிறைத்துறை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதில் 16 பேரின் உடல்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறையின் சுவர் வழியாக வீசப்பட்டது. மேலும் 41 பேர் மெத்தைகள் எரிக்கப்பட்டதில் வெளியான நச்சு வாயுவை சுவாசித்ததால் பலியாகினர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

பிரேசில் நாட்டில் சிறைக் கலவரம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த கலவரம் மிகவும் மோசமானது என்று செய்திகள் கூறுகின்றன.

முன்னதாக, கடந்த மே மாதம் அமேசான் நகரிலுள்ள சிறையில் நடைபெற்ற கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.(சே)

Previous articleபாகிஸ்தானில் விமான விபத்து:17 பேர் பலி!
Next articleடிக்கோயா நகர சபையில் வாக்குவாதம்! (காணொளி இணைப்பு)