பாகிஸ்தான் – சியால்கொட் பகுதியில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவை நினைவு கூரும் வகையிலும், இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் பாகிஸ்தானில் நாளை விசேட கண்டன தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக, பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் 140க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 34 பேர் பிரதான சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரியந்த குமார படுகொலை: கண்டன தினத்தை அறிவித்த பாகிஸ்தான்!
