மில்லியன் கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் ஐரோப்பாவிலிருந்து பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக
சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக கோடை காலங்களில் பல வர்ண பெண் வண்ணத்துப்பூச்சிகள் பிரித்தானியாவுக்கு பறந்து வரும் நிலையில்,
10 வருடங்களுக்கு ஒருமுறை மில்லியன் கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் பிரித்தானியாவுக்கு இடம்பெயர்கின்றன.
இந்நிலையில், இம்முறை வழமைக்குமாறாக அதிகளவான வண்ணத்;துப் பூச்சிகள் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவற்றைக் கணக்கிட தன்னார்வலர்களுக்கு தொண்டு நிறுவனம் ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.
2008 ஆம் ஆண்டில் இந்த அதிசய நிகழ்வு நடந்தபோது சுமார் 11 மில்லியன் பல வர்ண பெண் வண்ணத்துப்பூச்சிகள் பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (நி)








