பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இச்சந்திப்பு விடுதி ஒன்றில் இடம்பெறவுள்ளது.
அத்துடன், நாளைய தினம் சுன்னாகம் – கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழாவில், பிரதம விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் அழைப்பின் பேரில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதன் போது, ஐந்தரை கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் கலை அரங்கத்திற்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டி வைக்கவுள்ளார்.
இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட அதிகாரிகள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர். (நி)





