பாண் இறாத்தல் ஒன்றின் விலையை இன்று நள்ளிரவு முதல் 05 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூபா 8 இனால் அதிகரிக்கப்பட்டதை அடுத்தே 450 கிராம் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கின்றது.
கோதுமை மா விலை உயர்வடைந்ததனால் பாண் உட்பட வெதுப்பக பொருட்களின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. (நி)








