பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கான் பகுதியிலுள்ள, வைத்தியசாலை ஒன்றின் பிரதான நுழைவாயிலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த தாக்குதல் காரணமாக 30 ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களில் மூவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதனால், உயிரிழப்புக்கள் அதிகரிக்கக்கூடும் எனவும், அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மீட்புக் குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என, அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். (சி)









