பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவ விமான விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் – ராவல்பிண்டி நகரில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
விமானம் கீழே வீழ்ந்ததும் தீப்பற்றி எரிந்ததாக பாகிஸ்தான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
விமான விபத்தை அடுத்து ஏற்பட்ட தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியுள்ளது.
இந்நிலையில், விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (நி)