பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதி விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட சாதிக்கபாத் தேசில் பகுதியில், வால்கர் ரயில் நிலையத்தில், சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்த போது, எதிர்திசையில் வந்த பயணிகள் ரயில் தவறான தண்டவாளத்தில் சென்று, சரக்கு ரயில் மீது மோதியது.

இதில் பயணிகள் ரயிலின் இயந்திர பகுதியும் 3 பெட்டிகளும் நொருங்கின.

விபத்தில் ஒரு பெண், 8 ஆண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 ற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.

சம்பத்தில் காயமடைந்தவர்களை பொலிஸார் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக, பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி ஆரிப் அல்வி ஆகியோர் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் ரயில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறும், ரயில்வே அமைச்சருக்கு, பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். (சி)

Previous articleமுல்லைத் தீவில், தங்கம் தேடி அகழ்வு நடவடிக்கை
Next articleடிரம்ப் நேர்மையானவர் அல்ல-வெளியானது கருத்துக்கணிப்பு!!