பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெய்த கன மழை காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.
லாஸ்வா பகுதியில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், பல வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன.
இதேவேளை, பலர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மைக்குழு அதிகாரி சையது அல் ரஹ்மான் குரேஷி தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் பெய்த கனமழையால் லாஸ்வா பகுதியில் பல வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதில், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக்குழு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
லாஸ்வாவின் சந்தை, இரண்டு மசூதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்த நிலையில், தொலைபேசி மற்றும் இணையத்தள சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மைக் குழு, பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். (நி)









