யாழ்.  தீவகத்திற்கு பஸ் மூலமாக கடத்தப்பட்ட சுமார் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சாரதி மற்றும் நடத்துனா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் குறித்த மதுபான போத்தல்கள் மண்டைதீவு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி விவேகானந்தராஜ் தலைமையிலான குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன .

இதுதொடர்பில் பஸ் சாரதியும்,  நடத்துனரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

வேலணையை சேர்ந்த கால்நடை திருட்டுச் சம்பங்களுடன் தொடர்புடைய விஜேந்திரன்  என்பவரே இவற்றை யாழ்நகரில் கொள்வனவு செய்து அல்லைப்பிட்டியிலுள்ள ஒருவருக்கு அனுப்பிவைத்ததாக நடத்துனர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன் அடிப்படையில் மேற்படி இருவரையும் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.(சி)

Previous articleநியூசிலாந்தில் 2 விமானங்கள் விபத்தில் சிக்கியது
Next articleஇன்று காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி முன்னிலை