2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு அழகியல் பாடங்களில் தங்களின் செயல்முறைப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகள் தற்போது கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால், வேறு வசதியான நாளில் பரீட்சைக்கு தோற்ற ஏற்பாடு செய்துகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்து அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது தனிமைப்படுத்தலில் இருப்பவர்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றலாம். இவ்வாறான கோரிக்கைகளை பாடசாலைப் பரீட்சார்த்திகள் தமது அதிபர்கள் ஊடாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக்கொள்ள தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களத்தை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த செயல்முறைப் பரீட்சைகள் நாடு தழுவிய ரீதியில் பரீட்சைகள் திணைக்களத்தால் டிசம்பர் முதலாம் திகதி ஆரம்பித்து 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
மேலதிக விபரங்களை 011-2784208 மற்றும் 011-2784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Previous articleமுல்லைத்தீவில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்!
Next articleபிரியந்த குமார படுகொலை: கண்டன தினத்தை அறிவித்த பாகிஸ்தான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here