
தோட்டப்புறங்களில் காணப்படும் போக்குவரது வசதிகளை துரிதப்படுத்தும் நோக்கில் கொட்டகலை – பத்தனை கிறேக்கிலி தோட்ட நடைபாதை மக்கள் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் தலைவரினதும், உப தலைவரினதும் வேண்டுக்கோளை அடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட பத்தனை கிறேக்கிலி தோட்டத்தின் நடைபாதை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் நடைபாதையை பிரதேச மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் எம்.ஜெயகாந்த், முன்னாள் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம், பிரதேச வாசிகள் என பலர் கலந்துக்கொண்டனர். (நி)







