திருகோணமலை, புல்மோட்டை – முஸ்லிம் மீனவர்களுக்குச் சொந்தமான 3 படகுகள் மற்றும் இரண்டு இஞ்சின்கள் தீ இட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவம், இன்று (25) காலை இடம்பெற்றதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
புல்மோட்டை – ஜின்னாபுரக் கடலில் இனந்தெரியாத நபர்களால், அப்பகுதி மீனவர்களுக்குச் சொந்தமான மீன்பிடி படகுகள் 3 மற்றும் 40 குதிரைவலு கொண்ட 2 இன்ஜின்கள் முற்றாக தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.