அம்பாறை பாண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பக்திப்பரவசமூட்டும் துலாக்காவடி வைபவம் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர். மகாபாரத இதிகாசக் கதையினை அடிப்படையாகக்கொண்ட பண்பாட்டுக்குப்பேர்போன கிராமமாக பாண்டிருப்புக்கிராமம் அமைந்துள்ளது.
பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயவருடாந்த உற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை திருக்குளிர்த்திக்கால் வெட்டுதல், அம்மனின் தவநிலை வைபவம் ஆகியன நடைபெறவுள்ளன.
17 ஆம் திகதி திங்கட்கிழமை காலை அம்மனின் விநாயகப்பானை எழுந்தருளப்பண்ணல், வட்டுக்குத்தல், அம்மனின் திருக்குழந்தைகளை அழைத்துவருதல், சக்கரையமுது ஆகியன இடம்பெற்று இரவு 7மணிக்கு சிலம்பொலி, உடுக்கை, மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்குளிர்த்தி வைபவம் இடம்பெறவுள்ளது. அதன் பின் சமூத்திரத்தில் கும்பம்சொரிதலும், வாழிபாடுதலுடன் திருக்கதவு அடைத்து உற்சவம்இனிதே நிறைவுபெறவுள்ளது.

Previous articleநீராவியடி பிள்ளையார் ஆலய பெயர்ப்பலகைகள் அகற்றல்!
Next articleதிருக்கோவில் பிரதேசத்தில் 1643குடும்பங்களுக்கு சமூர்த்தி உரித்துப்படிவம் விநியோகம்.