நேபாளத்தை அச்சுறுத்தி வரும் இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இயற்கை அனர்த்தம் காரணமாக சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் பல துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேபாளத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு சார்ந்த விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதுடன், 24 பேர் காணாமல் போயுள்ளதாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (நி)








