பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 50 ரூபாவை உடனே வழங்க கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பிரிவான, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தினர், இன்று நுவரெலியாவில் கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த கையெழுத்துப் வேட்டை, இன்று காலை நுவரெலியா ஹட்டன் நகர மத்தியில் இடம்பெற்றது.
தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அரசாங்கத்தை, வீட்டுக்கு அனுப்புவதற்கு தோட்ட தொழிலாளர்கள் முன்வர வேண்டும் என கோரிக்கைவிடுத்து.
மலையகத்தின் அனைத்து பிரதான நகரங்களிலும் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், அமைச்சரவை அந்தஸ்துள்ள மலையக அமைச்சர்கள், தொழிலாளர்களுக்கு பாதீட்டில் பெற்றுத்தருவதாக கூறிய 50 ரூபாவை இதுவரை வழங்க முடியாமல் போயிருப்பதாகவும், உடனடியாக 50 ரூபா வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த கையெழுத்த வேட்டையின் போது, சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். (சி)






