நுவரெலியா நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில், டிப்பர் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.ஹங்குராங்கெத்த ஹேவாஹெட்ட பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்றும் தலவாக்கலை பகுதியில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சென்ற டிப்பருமே ஒன்றோடொன்று மோதியே விபத்துச் சம்பவித்துள்ளது.
விபத்தில் காரில் பயணித்த 5 பேரில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிப்பர் சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்குக் காரணம் என பொலிஸாரின் முதற் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நுவரெலியா – நானுஓயாவில் விபத்து!
