நுவரெலியா மாவட்டம் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோட்சிலி மொன்டிபெயார் தோட்டத்தில் பாக்கு மரத்திலிருந்த சிறுத்தையை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து விரட்டியடித்தனர்.காட்டுப் பகுதியிலிருந்து மொன்டிபெயார் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தைப்புலியை பிரதேசவாசிகள் விரட்டியபோது, வீட்டுத்தோட்டத்தில் உள்ள பாக்குமரத்தில் சிறுத்தை ஏறியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார், பட்டாசு வெடி வைத்து சிறுத்தை புலியை விரட்டியடித்தனர்.
நுவரெலியாவில் மரத்தில் ஏறிய சிறுத்தை விரட்டியடிப்பு!
