லிட்ரோ நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட எரிவாயுவை கப்பலிலிருந்து தரையிறக்க வேண்டாமென, லிட்ரோ நிறுவனத்துக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
கப்பலில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள குறித்த எரிவாயுவின் மாதிரியை சோதனைக்கு உட்படுத்தியபோது, அது இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் தரநிலையுடன் பொருத்தமற்றத்து என உறுதிப்படுத்தப்பட்டதால் நுகர்வோர் விவகார அதிகாரசபை இந்த அறிப்பை விடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று குறித்த கப்பலில் 3 ஆயிரத்து 700 மெட்ரிக் டன் எரிவாயுவை லிட்ரோ நிறுவனம் இலங்கைக்கு கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவல்வெட்டித்துறை நகர சபைக்கு மீண்டும் தவிசாளரானார் ச.செல்வேந்திரா!
Next articleசிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here