நுவரெலியா மாவட்டம் காசல்ரீ நீர்தேகத்தில் கரையோர பகுதிகள் மற்றும் நீரேந்தும் பகுதிகளில் நிரம்பி இருக்கும் குப்பைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம், இரண்டாவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது.
காசல்ரீ நீர்தேக்கத்தில் குப்பைகள் அதிகரிக்கப்பட்டு சூழல் மாசடைவு ஏற்பட்டதனாலும், களனி கங்கைக்கு செல்லும் இந்த நீரில் மாசு தன்மை ஏற்பட்டுள்ளதாலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வேலைத்திட்டத்தினை ஹட்டன், வட்டவளை, பொகவந்தலாவ, கினிகத்தனை, மஸ்கெலியா மற்றும் நோர்வூட் பொலிஸார் மற்றும் சிவில் அமைப்பினர், கடற்படையினர் ஆகியோர் ஒன்றிணைந்து மேற்கொண்டனர். கொழும்பு சூழலுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது நீர்தேகத்தின் கரையோர பகுதியில் காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீரேந்தும் பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம்!







