நேற்று நீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி இன்று (19) அக்கரபத்தன டொரிங்டன் தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள கொத்மலை ஒயாவிற்கு நீர் ஏந்தி செல்லும் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முதல் பெய்து வரும் அடை மழையினால் அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு மாணவிகள் நீரில் அடித்து செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு மாணவியை தேடும் பணி 2 வது நாளாகவும் இன்றும் நடைபெற்றது.
டொரிங்டன் பாடசாலையில் தரம் 07 கல்வி கற்கும் சகோதரிகளான 12 வயதுடைய மதியழகன் லெட்சிமி, மதியழகன் சங்கீதா ஆகிய மாணவிகளே பாடசாலை விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் ஆற்று நீர் பாதையில் பெருக்கெடுத்மையினால் பாதையை கடக்க முற்பட்ட போது நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில் மதியழகன் சங்கீதா என்ற மாணவி இன்று சடலமாக மீட்கபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். (சே)