12 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை இடம்பெறவுள்ளது.
நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள்மோதும், 12ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி
நாளை நடைபெறவுள்ளது.
லண்டன் லொட்ஸ் மைதானத்தில், இலங்கை நேரப்படி பிற்பகல் 3.00 மணியளவில் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில், இதுவரை 9 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி அதில் 4 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
நடப்பு வருட உலக கிண்ண போட்டியில், இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை லீக் போட்டியில் எதிர்கொண்டிருந்தது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 305 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 186 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இந்நிலையில், நாளை மீண்டும் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.
இரண்டு அணிகளும் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றில் சிறந்த திறனில் உள்ளமையினால் நாளைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை தோற்றிவித்துள்ளது.
இதேவேளை, 12 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் மோதும் இரு அணிகளும் இதுவரை உலக கிண்ணத்தை கைப்பற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (நி)






