அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான அங்கீகாரத்தை பாராளுமன்றத்தில் பெறுவதற்கான விவாதம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு விவாதம் ஆரம்பமாகி இரவு வரை நடைபெறவுள்ளது.
ஏற்கனவே அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.